பிரதான செய்திகள்

இன,மதவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த 25 பேர் கொண்ட குழு

(எம்.எப்.எம்.பஸீர்)

பரவி வரும் இன,மதவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொலிஸாருக்கு மேலதிகமாக விஷேட குழுக்களை அமைக்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார். 

அதன்படி ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் அந்த பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைக்கு அமைய அவரின் கட்டுப்பாட்டில் கீழ் வரும் கிராமசேவகர் பிரிவுகளில் தனித்தனியாக இந்த சிறப்புக் குழுவை அமைக்க பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர திட்டமிட்டுள்ளார்.

25 பேர் கொண்ட இந்த குழுவானது சர்வ மதங்களை பிரதி நிதித்துவம் செய்யும் வகையில் இந்த குழுவானது அமைக்கப்படவுள்ளது.

இலங்கை முழுதும் உள்ள 400 இற்கும் அதிகமான பொலிஸ் நிலையங்களை மையப்படுத்தி 14 ஆயிரத்து 22 கிராமசேவகர் பிரிவிலும்  செயற்படும் விதமாக இந்த குழு அமைக்கப்படவுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளார்.

Related posts

வவுனியா விபுலானந்தா பாடசாலை வளாகத்தில் தற்கொலை அங்கி

wpengine

சிகிரியா குகைக்கு செல்லும் படிகளை சீரமைக்க 4 கோடி நிதி உதவியை வழங்கிய யுனெஸ்கோ!

Editor

குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!

Editor