(ஹுதா உமர்)
கொடுரமான அரக்கர்காளாக மஹிந்த அரசை சித்தரித்து அவர்களின் அடக்குமுறைகளை இல்லாதொழிக்க முஸ்லிம் உம்மத்துக்களின் அபிலாஸைகளை வெற்றிகொள்ள நல்லாட்சி அரசின் நிருவுதளுக்காக முதலில் கைகொடுத்த மக்கள் அதிகாரமிக்க அரசியல் சக்திஎன்றால் அது இளம் தலைவர் ஒருவரை தலைமையாக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை.
முஸ்லிங்களின் ஏக தலைவர் நானே,மக்களின் கட்சி எனது கட்சி என தம்பட்டம் அடித்தவர்கள் மஹிந்த அரசில் நாகம் படமெடுத்து ஆடியபோது அந்த ஆட்சியில் அந்த நாகத்தின் ஆட்டத்தை அடக்கும் கம்பை கையில் வைத்திருந்தும் அந்த படமெடுக்கும் பாம்பை அடிப்பத்துக்கு பயத்தின் உச்சியில் இருந்துவிட்டு மக்கள் எல்லோரும் ஒருபக்கமாக இந்த அரசினை வீட்டுக்கு அனுப்ப ஒன்றினைந்தபோதும் செவியுள்ள செவிடர்களாக இறுதி சந்தர்ப்பம்வரை மதில்மேல் பூனையாக ஒரு கட்சி இருந்த போது சாணக்கியமாக காய்நகர்த்தி இந்த நல்லாட்சியை ஆதரிக்க முதன்முதலில் வேலி பாய்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களிடம் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய காலத்தில் உள்ளது எனபது காலத்தின் கட்டாயமாகும்.
கல்முனை ஆசாத் பிளாசாவில் நடந்த கூட்டத்தில் இந்த நல்லாட்சிக்கு எங்களுடைய கட்சி ஆதரவு என அறிவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மக்கள் முன்னிலையில் கூறிய விடயங்களை மறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். மஹிந்த ஆட்சி எங்களுக்கு அபிவிருத்தியை தந்தாலும் பள்ளிகளை உடைப்பதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.எங்களுக்கு எங்களது மார்க்கமும்,உயிர்களும் தான் முதலில் என ஒலிபெருக்கி அதரும் படியான உங்கள் உரையே மற்றைய கட்சிகளின் உள்ளத்தில் தீவிர பயத்தையும்,அவர்கள் மஹிந்த மீது வைத்திருந்த காதலில் விரிசலையும் உண்டாக்கியது என்றால் மறுப்பதுக்கு இல்லை.
அநீதியை எதிர்த்து குரல்கொடுத்து மகிந்தவின் ஆட்சியை கேள்விக்கு உட்படுத்திய உங்களது கட்சியின் ஆளுமையையும் தலைமை மீது மக்கள் கொண்ட நம்பிக்கையுமே உங்களை கல்முனை மண்ணில் வைத்து தேசிய தலைவராக அடையாளம் காட்டியது எனலாம். அதற்க்கு சாட்சியாக உங்களை அந்த மக்கள் தோளில் சுமந்ததையும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
ஆனால் இந்த நல்லாட்சியை ஆதரித்த நீங்கள் விட்ட மாபெரும் தவறு ஐக்கிய தேசிய முன்னணியின் யானைசின்னத்தில் தேர்தலில் களமிரங்கியதே என்பதை இந்த சில நாட்கள் உங்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கும் என்பது எனது நம்பிக்கை.ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியது போன்று சகலரும் போதுச்சின்னதில் களமிரங்கியுருந்தால் இந்த முஸ்லிங்களுக்கு இந்த நிலை ஏற்பட வாய்ப்பு குறைவே ? முஸ்லிங்களின் தீவிர விரோதிகளான இஸ்ரேலின் நெருங்கிய நண்பர்களான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டாளிகளாக இருந்துகொண்டு உங்களால் அறிக்கைவிடுவதை தவிர உருப்படியாக எதையும் செய்ய முடியாது என்பதை உங்கள் மனசாட்சி நன்றாக அறியும் என நம்புகிறேன்.
இந்த நல்லாட்சி அரசின் தவறுகளை தட்டிக்கேட்கும் ஆளுமையும் தகுதியும் உள்ள அமைச்சரான நீங்கள் அவர்களின் பதவிகளை அவர்களிடமே தூக்கி வீசிவிட்டு இந்த மக்களின் குரலாக எதிர்கட்சி ஆசனத்திலிருந்து மக்கள் காங்கிரசின் தேசிய தலைவராக,கலிமா சொன்ன முஸ்லிமாக ஒலிப்பதன் மூலம் நாட்டு மக்களின் கவனத்தையும்,முஸ்லிம் மக்களின் சரியான தலைவர் எனும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் மக்கள் காங்கிரசே உங்கள் அரசியல் வாழிகாட்டியான அஸ்ரபின் பாதையில் பயணிக்கிறது என்பதையும் நிருபிக்க வாய்ப்பாக அமைவதுடன்.எதிர்வரும் தேர்தல்களில் இதன் பயனை அடைய முடியும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
ரமழான் மாத இப்தார்களில் நாம் கவனம் செலுத்துவதை விட தீயில் எரியும் நமது வர்த்தக நிலையங்களை பற்றி சிந்திப்பது இந்த இப்போது அவசியமாகிறது.ரமழான் இப்தார்களில் அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டு பதவி என்னும் சட்டையை எப்போதும் கழற்றி வீச தயாராக இருக்கும் நீங்கள் இப்போது அந்த சட்டையை கழற்றி வீசும் நேரம் நெருங்கிவிட்டது என நம்புகிறேன் . அந்த சட்டையை எப்போது கழற்றி வீசப்போகிறீர்கள் ?? எப்போது முஸ்லிங்களின் தேசிய தலைவர் அஸ்ரபின் சாயலில் அநீதிகளுக்கு குரல்கொடுக்க போகிறீர்கள் ? என்ற ஏக்கமுடன் காத்திருக்கும் எதிர்கட்சி கதிரைக்கு நீங்கள் விரைவில் பதிலளித்து அமைச்சர் ரிசாத் வல்லவர் என்பதை விட முஸ்லிங்களின் தலைவன் ரிசாத் எம்.பி வல்லவர் என்பதை காட்டுங்கள் என வேண்டுகிறேன்.