பிரதான செய்திகள்

யாழ். அரியாலை காந்தி விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் காந்தி பிறீமியர் லீக் -04 கிறிக்கெட் போட்டி

யாழ். அரியாலை காந்தி விளையாட்டுக் கழகம் நடாத்திய காந்தி பிறீமியர் லீக் -04 கிறிக்கெட் போட்டி இன்றும் (10.06.2017) நாளையும் (11.06.2017) கால 8.30மணிமுதல் மாலை 6மணிவரை காந்தி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. ஸ்ரீகனகராஜரட்ணம் அவர்களின் தலைமையில் யா.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறுகின்றது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்கள் இ.ஆர்னால்ட், பா.கஜதீபன் மற்றும் யாழ் மாநகரசபை ஆணையாளர் பி.வாகீசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக எல்.மகேஸ்வரன்(அதிபர், யாழ். கனகரத்தினர் மத்திய மகாவித்தியாலயம்), ச.மாதுளசர்மா(ஆலய அர்ச்சகர், அம்பாள் தேவஸ்தானம்). வணபிதா ந.ஞானகருண்யன்(சபைக்குரு, புதின யோக்கோப்பு ஆலயம்)மற்றும் சனசமூக நிலைய தலைவர்கள், கிராம சேவையாளர், விளையாட்டு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். 
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்றல், கோடியேற்றல், மங்கள விளக்கேற்றல். சத்தியப்பிரமாணம், வீரர்கள் அறிமுகம் என்பன இடம்பெற்று போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. நாளையதினமும் போட்டிகள் நடைபெற்று தொடர்ந்து இறுதிப் போட்டிகளுடன் பரிசில்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.     

Related posts

11ம் திகதி நாடு திறக்கப்பட உள்ளது! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

wpengine

பாலித தெவரப்பெருமவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – சட்டத்தரணிகள் சங்கம்

wpengine

SLMC & ACMC எம்.பிக்கள் இன்று இனவாதியுடன் யார் இந்த உதயகமன்வில?

wpengine