பிரதான செய்திகள்

கொழும்பு மாநாகர சபை எல்லைக்குள் ஏற்படும் நீர் கசிவு காரணமாக 45 வீதம் நட்டம்

கொழும்பு மாநாகர சபை எல்லைக்குள் ஏற்படும் நீர் கசிவு காரணமாக 45 வீத நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலமையை தவிர்ப்பதற்காக 4 வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ. அன்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் நீர் கசிவதை 10 வீதமாக குறைப்பதற்கு முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு மாநகர சபைக்குட்டபட்ட பகுதிகளில் உள்ள நீர் குழாய்கள் 30 வருட பழமை வாய்ந்தது எனவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ. அன்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி , மட்டக்குளி.பொரளை மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் கசிவு ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம்

wpengine

ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் தொடர்கிறது; இதுவரை 05 பேர் பலி

wpengine

காதலிக்காக தந்தையினை கொலைசெய்த மகன்! 8வருடத்தின் பின்பு உடல் மீள எடுத்தல்

wpengine