(அல்ஹாஜ் ஹுதா உமர்)
கடந்த மஹிந்த ஆட்சியில் பள்ளிவாசல்களுக்கு கற்களால் எறிந்த இனம் தெரியாத நபர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட தீயசக்திகள் இப்போதெல்லாம் பள்ளிவாசல்களுக்கு குண்டுத்தாக்குதல் நடத்தும் அளவிற்க்கு முன்னேறியிருப்பது உண்மையில் எமது நாட்டை ஆட்சிசெய்கின்ற நல்லாட்சி அரசின் சாதனைகளில் ஓன்று என்றால் அது மிகையாகாது.
மகிந்தவின் காலத்தில் சிறியசிறிய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவந்த இனம்தெரியாத நபர்கள் இப்போதெல்லாம் பகிரங்கமாகவே தமது தீவிரவாத செயற்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளதை கண்டும் எமது அரசாங்கம் கள்ளன் பொலிஸ் விளையாட்டு விளையாடுவதை நாமெல்லாம் பார்த்துகொண்டு இருப்பது எமது தலைவிதி என்றாகிப்போனது மிக்க கவலையான ஒரு விடையமாகும்.
சிங்கள சகோதர்கள் அதிகமனோர்கள் கடந்த ஆட்சியை ஆதரித்தும் தமிழ் பேசும் தமிழர்களும் முஸ்லிங்கலுமே இந்த நல்லாட்சியை நிறுவியவர்கள் என்பதை இந்த அரசாங்கம் மறந்து செயற்படுவதன் மூலம் மீண்டும் சிறந்த பாடமொன்றை மக்கள் கற்பிக்க தயாராகின்றனர் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இந்த அரசை நிறுவுவதில் எந்தவித பங்களிப்புக்களையும் செய்யாது மக்கள் ஒருதிசையில் திரும்பியபின்னரும்,தபால் வாக்களிப்பு முடிந்த பின்னரும் சில மாற்றத்துக்கான இயக்கங்களின் மேடைகளில் தமது அழகான முகங்களை காட்டி இந்த அரசின் நிறுவுதலுக்கு நாங்களே காரணம் என படம்காட்டி இந்த ஆட்சியின் செல்லப்பிள்ளைகளாக இருக்கும் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டின் நடப்புக்களை நாங்கள் கூறித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.
தூங்கும் போதுஎந்த கடை தீப்பற்றும் என நினைத்து நிம்மதியாக தூங்க முடியாது தவிக்கின்ற எமது பொருளாதார நிலைய வர்த்தகர்களும்,அப்பாவி தொழிலாளர்களும் அவ்வளவு காலம் இப்படி இருக்கவேண்டும் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
இந்த அரசாங்கம் முஸ்லிங்க்களை நன்றாக பாதிக்கும் செயலை செய்கின்றவர்களை தமது வளர்ப்புப் பிள்ளைகளாக வைத்துகொண்டு செய்கின்ற தீவிரவாத செயல்களை நாம் அமைச்சர்களாக, பிரதியமைச்சர்களாக இருந்து கொண்டு தட்டிகேட்பதன் மூலம் எதுவும் ஆகாது என்பதை நாம் நன்றாக அறிவோம்.
வடக்கு மக்களின் காணிப் பிரச்சினையில் தொடங்கி எமது பள்ளிவாசல்களின் தாக்குதல்கள்,வர்த்தக நிலையங்கள் நெருப்புக்கு தீனியாதல், இறைவன், நபிகளாரை இகழ்தல் என இந்த அட்டுளியங்களின் பட்டியல் பெரிதாக உள்ளதை நாம் அறிந்தும் அதனை அடக்க முடியாது இருக்கும்ஆளும்கட்சிக்கு முட்டுக்கொடுத்து என்ன பயன் என்பதை சிந்திக்கும் நேரம் இது என்பதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
ஒரு நாட்டின் சரியான ஜனநாயக பண்புகளில் ஒன்றானது மிகவலுவான எதிர்கட்சி என்பதை நீங்கள் அறியாமலில்லை. ஆகவே இந்த ஆட்சியில் இருக்கும் இருபத்தொரு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் சிலர் மக்களையும்,இஸ்லாத்தையும்,நாளைய இறைவனின் கேள்விக்களையும் கருத்தில் கொண்ட இஹ்லாசான, இறைவனுக்கு அஞ்சுகின்றவர்களாய் உங்களில் சிலர் அமைச்சுக்களையும்,அதன்மூலம் கிட்டும் சகல இலாபங்களையும் திறந்து மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடு எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து உங்களுக்கு வாக்களித்த மக்களின் அழுகுரலுக்கு பதிலளிக்க முன்வாருங்கள்.
தமிழ் மக்களின் குறைகளை பேசுவதற்க்கு ஒரு அணியினரும்,அமைச்சுக்களை பெற்று அபிவிருத்தி செய்ய மறு அணியினரும் இருப்பதை நீங்கள் உங்கள் கண்களால் கானாமளும்மில்லை.அதே போன்றே சிங்கள மக்களின் நிலையம் ஆனால் எமது முஸ்லிம் தலைமைகள் மட்டும் எல்லோரும் ஒரே பக்கம் தஞ்சமடைந்திருப்பது நீ பெரியவரா நான் பெரியவரா என்கின்ற பலப்பரிட்சை நடத்த மாத்திரமே என்பதை உங்கள் மனச்சாட்சிகள் நன்றாக சாட்சி பகிரும்.
சக்தி மிக்க அமைச்சர் யார் என்பதல்ல எமது மக்களின் பிரச்சினை,யார் ஜனாதிபதியின் செல்லம்,யார் பிரதமரின் வால் என்பதல்ல எமது மக்களின் பிரச்சினை என்பதை நீங்கள் புரிந்துகொண்டு இந்த அநியாயங்களை அமைச்சர்களாக இருந்துகொண்டு ஊடகங்களுக்கு படம்காட்ட பாராளுமன்றத்தில் கத்துவதனால் எதுவும் ஆகப்போவதில்லை என்பதை நீங்கள் அறியாமளுமில்லை.
ஏனைய சில நாடுகளில் முஸ்லிங்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதை போல எமது நாட்டு முஸ்லிங்கள் வரலாற்றில் ஒரு தடவையேனும் செயற்படவில்லை என்பதையும் அரசாங்கத்துக்கு எப்போதும் ஒத்துழைப்புடன் இருந்திருக்கிறார்கள் என்பதை தெளிவூட்டி முஸ்லிங்களுக்கு எதிரான இந்த செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய கடமை உங்களை சாரும்.
ஆகவே மக்களின் சூடு பிடித்து கொழுந்து விட்டு எரியும் இனவாத தீயை முடக்கி,நிம்மதியாக வாழ வழிசமைக்க இறைபக்தியுள்ள அரசியல் தலைவர்கள் எதிரணியில் இருந்து உங்கள் குறைகளை தட்டி கேட்க முன்வரவேண்டும் என்பது உங்களை அந்த சபைக்கு அனுப்பிய மக்களின் ஆசை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் எங்களுடைய சகல முஸ்லிம் எம்.பிக்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.