Breaking
Tue. Nov 26th, 2024

வளைகுடா வலயத்திலுள்ள நாடுகள் கட்டார் நாட்டுடன் உள்ள உறவை நிறுத்திக் கொள்ள எடுத்துள்ள தீர்மானத்துக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

தனது சவுதி அரேபியாவுக்கான விஜயத்தின் நோக்கம் இதன் மூலம் நிறைவேறியுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இது பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையின், ஆரம்பம் எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் மத்திய கிழக்கு நாடுகளுக்கான எனது விஜயத்தின் போது, பயங்கரவாதத்துக்கு அனுசரணை வழங்குவது தொடர்பிலும், அதற்கு பக்கபலமாக இருப்பது குறித்தும் கடுமையான முறையில் விமர்ஷனம் செய்தேன்.

இதன்போது, வளைகுடா நாடுகளின் தலைவர்கள் கட்டார் நாடு தொடர்பில் தன்னிடம் கடுமையான முறையில் முறைப்பாட்டை முன்வைத்தாகவும் டிரம்பின் டுவிட்டர் பக்கத்தில் கட்டார் தடை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *