Breaking
Tue. Nov 26th, 2024

ஆப்கானிஸ்தான் பாடகியும், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவருமான அர்யானா சயீத், தன்னுடைய தோல் நிற ஆடை ஒன்றை வெளிப்படையாக எரித்துள்ளார்.

அண்மையில் நடந்த ஒரு இசைக்கச்சேரியின்போது, அர்யானா சயீத் அணிந்திருந்த இந்த ஆடையை மத தலைவர்களும், பொது மக்களும் விமர்சனம் செய்த பின்னர், இந்த ஆடைக்கு அவர் தீ வைத்துள்ளார்.

சொந்த நாடான ஆப்கானிஸ்தானில் விவாதப்பொருளாகி, சர்ச்சைக்குள்ளான இந்த ஆடையை தீ வைத்து எரிகின்ற காணாளியை அர்யானா சயீத், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

கடந்த மே மாதம் 13-ஆம் திகதி பாரிஸில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் அர்யானா சயீத் அணிந்த சர்ச்சைக்குரிய இந்த இறுக்கமான ஆடை, மத தலைவர்கள் மற்றும் சமூக ஊடகங்களின் கண்டனங்களுக்கு உள்ளானது.

“ஆப்கன் கலாசாரத்திற்கு எதிரானது, இது இஸ்லாமை சாராதது” என்று பலர் இந்த ஆடையை விமர்சித்திருந்தனர்.

இந்த ஆடையை எரித்துவிட்டதில் நிச்சயமாக திருப்தி அடையாத அவர், “ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரே பிரச்சனை இந்த ஆடைதான் என்று நீங்கள் எண்ணினால், உங்களுக்காக, நான் அதனை எரிக்கிறேன்” என்று சமூக ஊடகங்களில் தன்னை பின்தொடரும் 16 லட்சம் பேரிடம் தெரிவித்திருக்கிறார்.

அர்யானா சயீத் ஆப்கானிஸ்தானை சோந்த சிறந்த பாடகி, பாடலாசிரியர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் ஆவார். பாப் இசை, ஹிப்-ஹோப் இசை மற்றும் ஆப்கன் பாடல்களை நன்றாக பாடக்கூடியவர்.

காபூலில் இருந்து ஒளிபரப்பாகும் டோலோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற, குரல் வள திறமை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஆப்கன் பதிப்பில் நடுவராகவும் இவர் செயல்பட்டு வருகிறார்.

இவர் ஆடையை எரித்தது பற்றி சமூக ஊடகங்களில் கலவையான கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.

இந்த ஆடை எரிக்கப்பட்டது நியாயமானதே என்று பலர் கூறியுள்ளனர். “பெண்ணொருவர் ஆடையின்றி இருப்பது இஸ்லாமில் தடை செய்யப்பட்டிருப்பதை இஸ்லாமியரான நாம் அறிவோம். இது தவறு. அந்தோ பரிதாபம்” என்று ஒரு ஃபேஸ்புக் பயன்பாட்டாளர் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும், அர்யானா தன்னுடைய ரசிகர்களிடம் ஆதரவையும் பெற்றுள்ளார். “நியாயமற்ற வகையில் கேவலமாக விமர்சித்தவர்களின் சொற்களை வைத்து, அவர் இந்த ஆடையை எரித்திருக்க கூடாது. ஆடையை எரித்தது நல்லதல்ல” என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அர்யானா எதிரான நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். “இன்னும் இருண்ட காலத்தில் வாழ்வோரால் வழங்கப்பட்ட அழுத்தங்களால் அல்ல, நம்முடைய சமூகத்திலுள்ள முக்கிய பிரச்சனைகளை பற்றி இன்னும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதால், தான் இவ்வாறு செயல்பட்டிருக்கிறேன்” என்று அர்யானா தெரிவித்திருக்கிறார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *