பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் மீது பலி சுமத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மூதூர் பிரதேசத்தில் மூன்று சிறுமிகள் பாலியல் சேட்டைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் வீணாக முஸ்லிம்கள் மீது பலி சுமத்தப்படுவதற்கு எதிராக இன்று மூதூர் பிரதேசத்தில் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

மூதுர் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி மூதூர் பிரதேச செயலகம் வரை சென்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான வாலிபர்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் கடந்த (05) திங்கட்கிழமை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஐ..எம். ரிஸ்வான் முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிகளால் சந்தேகநபர்களை அடையாளம் காட்டமுடியவில்லை.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மூதூர் பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Related posts

உங்கள் மொபைல்போன் பாஸ்வேர்டு மறந்து விட்டதா பெறுவது எப்படி வீடியோ பாருங்கள்

wpengine

மீண்டும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி! இங்கிலாந்து அணி அதிர்ச்சி

wpengine

நேபாளத்தின் ICL சர்வதேச மாநாட்டில் மஸ்தான் எம்.பி (படம்)

wpengine