Breaking
Tue. Nov 26th, 2024
(எம்.எம்.ஜபீர்)
இறக்காமம் பிரதேச செயலகத்தின் கீழள்ள முகைதீன் கிராமம் மற்றும்  ஜபல் நகர் ஆகிய பிரதேச மக்களுக்கான முழுமையான இலவச குடிநீர் இணைப்பை   நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்பு செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான  ரகுமத் மன்சூரின் அயரத முயற்சியினால் சவூதி அரேபியாவின் நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் 1.4 மில்லியன் ரூபாய் செலவில் இலவச குடிநீர் இணைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இறக்காமம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.எல்.நிஸார் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்பு செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரகுமத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இலவச குடிநீர் இணைப்பை பிரதேச மக்களிடம் கையளித்தார்.
இதில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பிரதி தலைவரும் அம்பாரை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவருமான அஷ்ஷெக் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி, நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் பைசால் இப்றாகீம், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாரை மாவட்ட உதவி பொது முகாமையாளர் எம்.எம்.நசீல், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜெ.நஸ்ரூல் கரீம்,இறக்காமம் அனைத்து பள்ளிவாசல் தலைவர் ஏ.கே.அப்துல் ரவூப், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இறக்காமம் நிலையப் பெறுப்பதிகாரி எம்.எச்.ஏ.ஜப்பார், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு செயலாளர் எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர், முன்னாள் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் மௌலவி யு.கே.ஜாவிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான யூ.எல்.ஜிப்ரி, எம்.எல்.முஸ்மில், என்.எம்.ஆஷீக், பயணாளிகள், இளைஞர்கள், உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள்  என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நீண்டகாலமாக குடிநீர் இன்மையினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட முகைதீன் கிராமம் மற்றும்  ஜபல் நகர் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் இலவசமாக குடிநீர் இணைப்பைக் பெற்றுக்கொடுக்க அயராது பாடுபட்ட நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்பு செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான  ரகுமத் மன்சூருக்கு பிரதேச மக்களினால் மகத்தான வரவேற்று அழித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *