Breaking
Tue. Nov 26th, 2024
நல்லாட்சியில் திருகோணமலை மலையாவெளி பெரியகடை ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் கட்டவிழ்த்தப்படுமானால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள கே லங்கா சொலூசன் நிறுவனத்தின் (K LANKA SOLUTIONS (PVT) LTD.) அறிமுக நிகழ்வும் இப்தார் வைபவமும் ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் 2017.06.03-சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…
திருகோணமலை, மலையாவெளி, பெரியகடை ஜும் ஆ பள்ளிவாசல் மீதான தாக்குதல் என்பது சிறுபான்மை சமூகங்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்குள் பல குழப்பங்களை ஏற்படுத்தக் கூடிய விடயங்கள் என்ற சந்தேகம் எங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெற்றோல் குண்டு வீசப்பட்ட இடமானது முஸ்லிம்களின் கன்னியமான ஒரு மதஸ்தலம். இதில் கை வைத்தால் எந்த அளவு விபரீதம் ஏற்படும் என்பதை கடந்த அரசாங்கத்தில் பார்த்திருந்தோம்.
முஸ்லிம்களின் பள்ளிவாசல் மற்றும் அடிப்படை விடயங்களில் கை வைத்ததன் காரணத்தால்தான் மகிந்த அணியை மாற்றுகின்ற விடயத்தில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள். வடக்கு, கிழக்கு பகுதியில் புலிகள் காலத்தில் முஸ்லிம்கள் பட்ட கஷ்டங்களும் இன்னல்களும் நமக்கு தெரியும்.

இவ்வாறு இன்னல்களை அடைந்த முஸ்லிம்கள் ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அபிவிருத்திகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் முஸ்லிம்களின் அடிப்படையில் கை வைத்தமையால் ராஜபக்ஷவை தூக்கி எறிகின்ற அளவிற்கு ஒன்றுபட்டார்கள்.
இந்த நல்லாட்சியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் கட்டவிழ்த்தப்பட்டு அந்த தாக்குதலுக்குரிய சூத்திரதாரிகள் அடையாளம் காணப்படாமல் விடப்படுவதென்பதும், சட்டம் அதனுடைய செயற்பாட்டை செய்யவிடாமல் தடுக்கப்படுகின்ற விடயங்கள் என்பனவும் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதற்கு எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை எனவும் அவர் தொடர்ந்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோர் கலந்துகொண்டதோடு, பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும் ஏறாவூர் சம்மேளனத்தின் தலைவருமான சாபிர் ஆசிரியர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் அன்வர், முஹாஜிரீன் மற்றும் வாசுதீன், ஈஸ்ட் மிறர் இணையத்தளத்தின் பணிப்பாளர் அன்வர் நௌஷாத், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் ஹைதர் அலி, கல்குடாத்தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திபாஸ், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *