இவ்வருட ஹஜ் கடமைக்காக தெரிவு செய்யப்பட்டு 25 ஆயிரம் ரூபா முற்பணம் செலுத்தி பயணத்தை உறுதி செய்துள்ள ஹஜ் பயணிகள் ஹஜ் முகவர்களிடம் தமது கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டிய இறுதித் திகதி இன்றாகும்.
இத்திகதி மேலும் நீடிக்கப்படமாட்டாது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.
இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ஹஜ் பயணிகள் தாம் தெரிவு செய்யும் ஹஜ் முகவர்களிடம் உடனடியாக இன்று திங்கட்கிழமை தங்கள் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டும். கடவுச்சீட்டுகளை ஒப்படைக்கத்தவறும் பயணிகள் தொடர்பில் திணைக்களம் பொறுப்பேற்க மாட்டாது.
ஹஜ் ஏற்பாடுகளில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை வரை 1400 ஹஜ் பயணிகள் தங்களது கடவுச்சீட்டுகளை ஒப்படைத்திருந்தனர்.
மேலும் 1250 பயணிகள் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டியுள்ளன என்றார்.