பிரதான செய்திகள்

திருகோணமலை பள்ளிவாசல் தாக்குதல்! அன்வர் விஜயம் உரிய நடவடிக்கை எடுக்க பணிப்புரை

திருகோணமலை மனையாவெளி பெரியக்கடை ஜும்மா பள்ளிவாசல் இனம் தெரியாத சிலரால் (03) சனி அதிகாலை 12.30 மணியளவில் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன ஐந்து மண்ணெண்ணெய் போத்தல்கள் அடங்கிய மண்ணெண்ணெய் வீச்சு இடம்பெற்றுள்ளது இதன் போது பள்ளிவாசலின் உள் பகுதியின் விரிப்புக்கள் மற்றும் உடைமைகள் என்பன சேதமடைந்துள்ளன.

குறித்த பாதிக்கப்பட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன் பள்ளிவாசல் தலைவர் அலி உட்பட்ட நிர்வாக குழுவினரை சந்தித்து இதுவிடயமாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெறிவித்ததுடன் தொடர்ந்தும் பொலிசாரால் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.

இதன் பொது அப்பிரதேசத்தை சேர்ந்த முன்னால் மாகாண சபை உறுப்பினர் பரசுராமணம் சம்பவ இடத்திற்க்கு வருகை தந்திருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தன்னைதானே குத்தி குடும்பஸ்தர் மரணம்! – வவுனியாவில் சம்பவம் .

Maash

இனவாதிகளின் ஏஜன்டுகளாக களமிறங்கியுள்ள நமது சோனிகள்

wpengine

முசலி பிரதேச சபையின் 41 ஆவது அமர்வு முஜிப் ரஹ்மானின் கோரிக்கை

wpengine