உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முஸ்லிம் நாடுகளுக்கான மீண்டும் வெள்ளை மாளிகை தடை

முஸ்லிம்கள் பெரும்பாமையாகக் கொண்ட நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்பினால் விடுத்திருந்த சுற்றுலாத் தடையை மீண்டும் பலப்படுத்துமாறு வெள்ளை மாளிகை அந்நாட்டின் அதிகாரிகளைக் கேட்டுள்ளது.

இந்த தடையை நீக்குமாறு கூறி அந்நாட்டின் கீழ் நிலை நீதிமன்றமொன்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு அமெரிக்காவின் பெட்ரல் மேன்முறையீட்டு நீதிமன்றமும் உடன்பாடு தெரிவித்திருந்தது.

இந்த உத்தரவை செல்லுபடியற்றதாக்கி மீண்டும் சுற்றுலாத் தடையை அமுல்படுத்துமாறு வெள்ளை மாளிகை அந்நாட்டின் உயர் நீதிமன்றத்துக்கு இரு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யெமன் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று மாலை 6மணியில் இருந்து திங்கள் காலை 6மணி வரை ஊடரங்கு சட்டம்

wpengine

மஹிந்த,ரணில் இரகசிய உறவு

wpengine

யாழ். மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் தமிழ் அரசியல்வாதிகள்.!

Maash