Breaking
Mon. Nov 25th, 2024
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்தும் கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 31ம் திகதி ஜெனிவாவில் உள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, உதய கம்மன்பில, கெஹெலிய ரம்புக்வெல, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட 7 பேரை கொண்ட குழுவினரே ஜெனிவா செல்லவுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியின் ஜெனிவா விஜயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தொடர்ந்தும் கூறுகையில் ,

பாராளுமன்றத்தில் 52 உறுப்பினர்களை கொண்ட கூட்டு எதிர்க்கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி ஆசனத்தை வழங்காது அதனை பாராளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கையில் குறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனை தவிர பாராளுமன்றத்தில் கருத்துகளை தெரிவிக்க கூட கூட்டு எதிர்க்கட்சிக்கு வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில் தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது.

அந்த வகையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக முறைப்பாடு செய்வதற்காக கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 31ம் திகதி ஜெனிவாவில் அமைந்துள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திற்கு செல்லவுள்ளது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற அடக்குமுறைகள் மற்றும் தேர்தலை ஒத்தி வைத்து முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக விரோத செயற்பாடுகள் உள்ளிட்ட அரசின் ஜனநாயக் விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே கூட்டு எதிர்க்கட்சி ஜெனிவா செல்கின்றது.

அரசாங்கம் பல நெருக்கடிகளை தொடர்ந்தும் கூட்டு எதிர்க்கட்சி மீது கட்டவிழ்த்துள்ளது. அதி கூடிய எண்ணிக்கைகளை கொண்ட கூட்டு எதிர்க்கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சிக்கான ஆசனம் வழங்கப்படவில்லை.

மாறாக தமிழ் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் குரல் படுமோசமான முறையில் அடக்கப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்கம் என கூறிக்கொண்டு நாட்டில் பல்வேறு ஜனநாயக விரோத செயற்பாடுகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுப்படுகின்றது.

இதனடிப்படையிலேயே கூட்டு கட்சி எதிர் வரும் 31ம் திகதி வியாழக்கிழமை ஜெனிவா செல்கின்றது.

பொது மககள் வழங்கிய ஆணையை மீறி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் சுட்டு எதிர்க்கட்சி எழுத்து மூலமான முறைப்பாட்டை அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில் கையளிக்கும் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *