பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்காக பேசும் அமைச்சர் ஹக்கீம்! முஸ்லிம்களை பிரிக்க சதி

முஸ்லிம் மக்களை இந்த அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்பும் நோக்கில் திட்டமிட்ட வகையில் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், இதனை அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கையாகவே தாம் பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை, குறைபாடு இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எந்தவொரு சமயத்தையோ அல்லது சமயத் தலைவரையோ விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து பொலிஸார் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருள் 10 ரூபாய் குறைப்பின் மூலம் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு சாத்தியமில்லை .

Maash

ஞானசார தேரர் விடுதலை! கொச்சைப்படுத்திய இந்து சம்மேளனம்

wpengine

ராஜபக்சக்களை பாதுகாப்பது, திருடர்களை பாதுகாப்பது கற்றுக்கொள்ளவில்லை

wpengine