Breaking
Mon. Nov 25th, 2024

இலங்கை தேர்தல் திணைக்களம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 திகதியை வாக்குரிமை உள்ளவர்களின் தேசிய தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில், இலங்கையில் வாழும் மக்களில் வாக்காளர்களாக உள்ளோரை கெளரவப்படுத்தும் நோக்கிலும், வாக்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பில் பொதுமக்களுக்கு,அறிவூட்டுவதற்கும் ஜூன் மாதம் 01 ஆம் திகதியை வாக்குரிமை உள்ளவர்களின் தேசிய தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் ஜனநாயக வழியில் இடம்பெறும் தேர்தல்களின் போது எமது அடிப்படை உரிமையான வாக்குரிமையைத் தவறாது பயன்படுத்துவதற்கு ஏதுவாக 18 வயதைப் பூர்த்தி செய்து அனைவரும் எங்களை வாக்காளர்களாகப் பதிவதற்கு முன்வருவோம்.

மேலும், இந்த வருடத்துக்கான வாக்காளர் மீளாய்வுப் பணிகள் தற்போது கிராமசேவகர் பிரிவு ரீதியாக இடம்பெற்று வரும் நிலையில் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எம் ஒவ்வொருவரையும் வாக்காளர்களாகப் பதிவதன் ஊடாக எங்கள் வாக்குகள் ஒவ்வொன்றையும் பெறுமதியுடையதாக்குவோம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *