Breaking
Sun. Nov 24th, 2024
இனவாதம் மற்றும் இனவெறி சம்மந்தமான பேஸ்புக் பதிவை லைக் செய்த நபருக்கு சுவிஸ் நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் Zurich நகரை சேர்ந்த 45 வயதான நபர் கடந்த 2015ல் விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் Erwin Kessler-ன் பேஸ்புக் பதிவை லைக் செய்தார்.

அந்த பதிவு தொடர்பாக ஏற்கனவே Erwin மீது இனவாதம் மற்றும் இனவெறி சம்மந்தமாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர் லைக் செய்ததால் மீண்டும் வைரலாகியுள்ளது.

இதனையடுத்து பேஸ்புக் பதிவை லைக் செய்த நபர் மீது Erwin நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தீங்கு விளைவிக்கும் நோக்கில் இதை செய்ததாக Erwin-னின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார்.

ஒன்றரை வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி Catherine Gerwig கூறுகையில், சர்ச்சைக்குரிய பதிவை குற்றம்சாட்டபட்ட நபர் லைக் செய்ததன் மூலம் அதை அவர் ஆதரித்துள்ளது நிரூபணமாகிறது.

மேலும், அந்த பதிவு உண்மை தான் என அவரால் நிரூபிக்க முடியவில்லை.

என்ன தான் கடந்த 1998ல் Erwin இனவெறி சம்மந்தமான வழக்கில் குற்றவாளி என கூறப்பட்டிருந்தாலும், இந்த சம்பவத்தில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

ஆகவே, பேஸ்புக் பதிவை லைக் செய்த நபருக்கு 4000 டொலர் அபராதம் விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *