பிரதான செய்திகள்

அமானுல்லாஹ் அதிபரின் மறைவு சமூகத்துக்கு பாரிய இழப்பு அமைச்சர் றிஷாட் அனுதாபம்

முன்னால் அதிபர் அமானுல்லாஹ் ஆசிரியரின் மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்  அமைச்சருமான றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

மன்னார் தாராபுரத்தில் சிறந்த கல்விக்குடும்பத்தில் பிறந்த அவர் நீண்ட காலம் நல்லாசிரியராகவும் திறமை மிக்க அதிபராகவும் பணியாற்றியவர். அவரது தந்தையார் ஒரு புலவர் ஆவார்.  ஓய்வு பெற்ற பின்னர் எனது அமைச்சில் பணியாற்றினார்.  எனது அரசியல் வாழ்வில் மறக்க முடியாத ஒருவர்.  ஆரம்பம் முதல் எனது அரசியல் பணிகளில் ஆர்வமுடன் இணைந்து சமூக நல பணிகளுக்கு  பக்க பலமாக நின்று பணியாற்றியவர். எனது அமைச்சின் பொதுசனத் தொடர்பு அதிகாரியாகவும், பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றியிருக்கின்றார்.

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து அகதியாக வாழ்ந்த மக்களின் நல்வாழ்வுப்பணிகளுக்கும் மீள்குடியேற்றப்பணிகளுக்கும் பெரிதும் உழைத்து வந்தார். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களை உள்ளன்போடு அழைத்து உதவி செய்யும் நல்ல மனப்பாங்கு கொண்டவர்.

அன்னார் நல்ல நிர்வாகத்திறமை கொண்டவர். திறந்த பேச்சாளராகவும் இருந்த அவர் அனைவராலும் விரும்பப்பட்டார். எவருடனும் அன்பாகப் பழகும் சுபாவம் கொண்டவர். அமைச்சில் பணியயாற்றிய காலங்களில் இன,மத பிரதேச அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தனது பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கினார்.

அன்னாரின் மறைவு அவரது குடும்பாத்தாருக்கும் சமூகத்துக்கும் மாத்திரமன்றி எனக்கும் தனிப்பட்ட ரீதியில் பாரிய இழப்பாகும்.

அன்னாரின் மறைவால் கவலையுறும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன். எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை வழங்குவானாக.

Related posts

சமூக வலைத்தளங்கள் தடை அவகாசம் எடுக்கும்! பலர் மனரீதியாக பாதிப்பு

wpengine

இலங்கை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் பாரிய போராட்டம்.

Maash

நட்டத்தில் இயங்கும் 55 டிப்போக்களுக்காக பல புதிய நடவடிக்கைகள் – பிமல் ரத்நாயக்க.

Maash