(ஊடகப்பிரிவு)
நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதொச கிளைகள் மூலமும், சதொச களஞ்சியச்சாலைகள் மூலமும் அத்தியாவசியப் பொருட்களையும், ஏனைய உலர் உணவுப் பொருட்களையும் விநியோகிப்பதற்கு கைத்தொழில், மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடபில் அந்தந்த பிரதேசங்களிலுள்ள அரசாங்க அதிபர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கவென அவர்களுக்கு தேவையான பொருட்களை அரசாங்க அதிபர்களும், பிரதேச செயலாளர்களும் சதொசவில் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சதொச தலைமையகத்திலும், சதொச கிளைகளிலும் அரச உயர் அதிகாரிகள் தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் கருதி அதனை விநியோகிக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பாதிப்புக்கு உள்ளானவர்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளரிடம் தெரிவிக்க முடியும். அரச உயர் அதிகாரிகள் பாதிப்புற்றோருக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.