பிரதான செய்திகள்

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் மீண்டும் விவாதம்

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்குவது சம்பந்தமாக பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் எதிர்வரும் 31ம் திகதி விவாதம் நடத்தப்பட உள்ளதாக தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்ட உலக தமிழர் பேரவை, தமிழர் புனர்வாழ்வு அமைப்பு மற்றும் ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர் அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் இன்னும் உரிய முறையில் வழங்கப்படாத நிலையில், கடந்த 19ம் திகதி முதல் இலங்கைக்கு வரிச்சலுகையை வழங்கியமை சம்பந்தமாக ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர்ந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளை கொண்ட அரசியல் மற்றும் சிவில் அமைப்புகள், ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக விவகார ஆணையாளருக்கும் தமது எதிர்ப்பை வெளியிட்டு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

இந்த விவாதத்தின் போது ஐரோப்பிய வர்த்தக விவகார ஆணையாளர், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் வழங்குவது சம்பந்தமான முழுமையான அறிக்கையை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சமர்பிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

Related posts

அமைச்சு பதவியில் மாற்றம்

wpengine

அரச சம்பளத் தொகையில் அரைவாசி இராணுவத்திற்கே; பல்கலைக்கழக ஆய்வில் தகவல்!

Editor

கியூபா விமானம் விபத்து பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

wpengine