பிரதான செய்திகள்

சிலாவத்துறை வைத்தியர் பணிப்பகிஷ்கரிப்பு! பல நோயாளிகள் அவதி

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவு சிலாவத்துறை பிரதான நகரில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைக்கு இன்று வைத்தியர்கள் கடமைக்கு வருகாமையினால் பல நோயாளிகள் மிகவும் கஷ்டத்தை எதிர் நோக்கி உள்ளதாக பிரதேச மக்கள்,நோயாளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் தெரிவிக்கையில்;

இன்று காலை வைத்தியசாலைக்கு சென்ற வேலை எந்த ஒரு வைத்தியரும் இல்லையேன்றும் சுகாதார ஊழியர்கள்,இன்னும் கடமையாற்றும் உத்தியோகத்தரிடம் இது தொடர்பில் ஏன் வைத்தியர்கள் வரவில்லை என்று கேட்ட போது அனைவருக்கும் காரணம் தெரியாமல் தான்தோன்றி தனமாக பதில்களை தெரிவித்தார்கள் எனவும் தெரிவித்தனர்.

சிலாவத்துறை வைத்தியசாலையில் வைத்தியர் தொடர்பான பிரச்சினை கடந்த ஒரு வருடகாலமாக பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது எனவும்,இது தொடர்பில் பல அரசியல்வாதிகளிடம் முறைப்பாடு செய்தும் இதுவரைக்கும் தீர்வு கிடைக்கவில்லையென்றும் மத்திய அரசாங்கத்தில் சுகாதார ராஜாங்க அமைச்சராக இருக்கின்ற பைசல் ஹாசீம் அவர் கூட எமது வைத்தியசாலையினை பார்வையிட்டு சென்றுள்ள போதும் தீர்வு கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவித்தனர்.

வைத்தியர்கள் இன்மையினால் இந்த பிரதேச வைத்தியசாலையில் பல கற்பிணிதாய்மார்கள் மூச்சக்கர வண்டியில் மன்னார் கொண்டுசென்ற வேலையில் கூட சில தாய்மாரின் பிள்ளைகள் இறந்து கூட இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தனர்.

 எமது சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையினை நம்பி முசலி பிரதேசத்தில் சுமார் 7000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கரிசனை எடுத்து பிரச்சினையினை தீர்த்து தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related posts

​2022 ஆம் ஆண்டு வங்கி விடுமுறை நாட்களை அதிகரித்தார்.

wpengine

இன்று பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதிகள் சற்று நிதானமாக நடப்பது அவசியம்

wpengine

அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தபடவில்லை

wpengine