Breaking
Mon. Nov 25th, 2024

மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4 மாடிக் கட்டடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்.

குறித்த கட்டடத்தொகுதி மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதி உதவியுடன் சுமார் 305 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் மன்னார் மாவட்டச் செயலக கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

 

இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, றிஸாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன், சாகல ரத்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான், பா .டெனீஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கொண்டுள்ளனர்.

பிரதமரின் மன்னாரின் வருகையினை நினைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நினைவு சின்னம் ஒன்றை வழங்கி வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து புதிய மாவட்டச் செயலக கட்டடத்தொகுதிக்குச் சென்று பிரதமர் உத்தியோக பூர்வமாக கையொப்பமிட்டு பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த மாவட்டச் செயலக மைதானத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *