தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

அமெரிக்க விசா விண்ணப்பத்தில் பேஸ்புக், ட்விட்டர் கணக்கு விபரங்களைக் குறிப்பிட வேண்டும்.

அமெரிக்க விசாவினைப் பெறுவதற்கு பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட கணக்கு விபரங்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்ற புதிய முறை அமுலுக்கு வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு ஊழியர்களின் வருகையைக் கட்டுப்படுத்த H1-B விசாவில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தார்.

அதேபோல், அமெரிக்காவில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் அவர், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாவில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அமெரிக்க விசாவிற்கான விண்ணப்பத்தில் 5 ஆண்டுகள் பயன்படுத்திய பேஸ்புக், ட்விட்டர் கணக்கு விபரங்களைக் குறிப்பிட வேண்டும் என்றும், இ-மெயில், தொலைபேசி எண் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விசா விண்ணப்பதாரி தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவரா என்பதை அறிவதற்காக இதுபோன்ற முறை அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

6 வாரங்களில் 120 பில்லியன் அரசாங்கத்திற்கு நஷ்டம்

wpengine

மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு தின நிகழ்வு!

wpengine

மோடி உலக பிரபல 10 குற்றவாளிகளின் பட்டியலில்

wpengine