Breaking
Fri. Nov 22nd, 2024

மாகா­ண­சபை தேர்­தலை  தனித்­த­னி­யாக நடத்­தாமல்  அனைத்து மாகா­ண­ச­பை­க­ளி­னதும் தேர்­தலை  ஒரே தினத்தில் நடாத்தும் வகையில் அர­சியல் யாப்பு மற்றும்  மாகாண சபைகள் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான அங்­கீ­கா­ரத்தை அமைச்­ச­ரவை வழங்­கி­யுள்­ளது. 

அர­சியல் யாப்­பிலும், மாகா­ண­சபைச் சட்­டத்­திலும் இவ்­வா­றான திருத்­தங்கள்  மேற்­கொள்­ளப்­பட்டால் சப்­ர­க­முவ, கிழக்கு மற்றும் வட மத்­திய மாகாண  சபை­களின் தேர்தல் உட்­பட  அனைத்து மாகாண சபை­களின் தேர்­தலும்  ஒரே தினத்தில்  நடாத்­தப்­படும் என அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ளது.

மாகாண சபை­களின் தேர்­தல்கள்  தனித்­த­னி­யாக  நடாத்­தப்­ப­டாமல், ஒரே தட­வையில்  நடத்­தப்­பட வேண்­டு­மென்ற  நடை­முறை  இருந்­தாலும்,  கடந்த காலங்­களில் மாகாண சபை தேர்­தல்கள் தனித்­த­னி­யாக  நடத்­தப்­பட்­டன. இதனால்  பெரு­ம­ளவு நிதி, மனி­த­வளம் மற்றும்  வளங்கள்  பெரு­ம­ளவில்  வீண்­வி­ரயம்  செய்­யப்­பட்­டன. மக்­களின்  அன்­றாட  நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டன. அரச சேவைகள்  தாம­தங்­க­ளுக்­குள்­ளா­கின என பிர­தமர் இந்த  ஆலோ­ச­னையை அமைச்­ச­ர­வையின் முன்­வைத்து  விளக்­க­ம­ளித்தார்.

மேலும் மாகா­ண­ச­பை­களின் தேர்தல்  தனித்­த­னி­யாக  நடாத்­தப்­ப­டு­வதால் தேர்தல் ஊழல்கள், அரச சொத்­துக்­களின் முறை­யற்ற பாவனை என்­பன அதி­க­ரித்துக்  காணப்­ப­டு­கின்­றன. எனவே  மாகாண சபை­களின் தேர்­தலை ஒரே தினத்தில் நடாத்­து­வதால் இவற்றைத் தவிர்க்க முடியும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் விளக்­கினார். இத­னை­ய­டுத்து அமைச்­ச­ரவை மாகாண சபை­களின் தேர்­தலை ஒரே தினத்தில்  நடத்­து­வ­தற்கு  அங்­கீ­காரம் வழங்­கி­ய­தாக  காணி மற்றும்  பாரா­ளு­மன்ற மறு சீர­மைப்பு அமைச்­சரும், அமைச்­ச­ர­வையின் இணை ஊடக பேச்­சா­ள­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.

நேற்று மதியம் தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடக மாநாட்­டிலே  அவர்  இத்­த­க­வலை வெளி­யிட்டார். அவர்­தொ­டர்ந்தும் தெரி­விக்­கையில்,  உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் புதி­தாக அமைத்தல், மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை   தர­மு­யர்த்தல் தொடர்பில் அது­தொ­டர்­பான நட­வ­டிக்­கை­க­ளுக்கு  சட்ட ரீதி­யான  ஏற்­பா­டுகள்  எதுவும் இல்லை.  இதன் கார­ண­மாக முறை­யற்ற ரீதியில் ஸ்தாபிக்­கப்­பட்ட  உள்­ளூ­ராட்சி  மன்­றங்கள் தமது நிர்­வா­கத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு தேவை­யான  பொரு­ளா­தார  பின்­னணி இல்­லா­ம­லுள்­ளன. இதனால்  இதற்­கான  செல­வு­களை  மத்­திய  அர­சாங்­கமே பொறுப்­பேற்க வேண்­டி­யுள்­ளது. இந்த உள்­ளூ­ராட்சி  மன்­றங்கள் மூலம் மக்கள்  எதிர்­பார்க்கும்  சேவை­க­ளையும்  வழங்க முடி­யா­ம­லுள்­ளன.

இதே­வேளை, 1999 ஆம்­ ஆண்டு  வெளி­யி­டப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மறு­சீ­ர­மைப்பு தொடர்­பி­லான  விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் சிபார்­சு­களின் அடிப்­ப­டையில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை  உரு­வாக்­குதல் மற்றும் தர­மு­யர்த்தல் தொடர்­பான கொள்­கை­யினை  அறி­முகம்  செய்­வது தொடர்பில்  சிபார்­சு­களை  முன்­வைப்­ப­தற்கு  மாகாண சபைகள் மற்றும்  உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரினால்  12 பேர்  கொண்ட துறை­சார்ந்தோர் குழுவொன்று  நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் சிபாரிசுகளுக்கு ஏற்பவே  எதிர்காலத்தில் புதிய உள்ளூராட்சி  மன்றங்கள் உருவாக்குதல் மற்றும் தரமுயர்த்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாகாணசபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவின்   இந்த  ஆலோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *