அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

9 வருடங்களில் 3,477 காட்டு யானைகள் மரணம்.!

இலங்கையில் கடந்த 9 வருடங்களில் 3,477 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக இன்று (06) பாராளுமன்றத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.

சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி பாராளுமன்றத்தில் கருத்து வௌியிடுகையில், 2015 முதல் 2019 வரை 1,466 காட்டு யானைகளும், 2020 முதல் 2024 வரை 2,011 காட்டு யானைகளும் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காட்டு யானைகளின் தாக்குதலால் கடந்த 9 வருடங்களில் 1,190 மனிதர்கள் உயிரிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதாவது, 2015 – 2019 காலகட்டத்தில் 456 பேரும், 2020 – 2024 காலகட்டத்தில் 734 பேரும் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிள் துபாய்க்கு ?

Maash

முசலி பிரதேச செயலாளர் தலைமை! முள்ளிக்குளம் மக்களின் காணி ஆவணங்கள் பரிசீலினை

wpengine

பேஸ்புக் பதிவால் பாதிப்படைந்த பெண் தற்கொலை

wpengine