Breaking
Sun. Nov 24th, 2024

(ஜெம்சித் (ஏ) றகுமான்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீனை பணத்துக்காகவும்,தொழிலுக்காகவும் இழிவுபடுத்தி சமூக ஊடகங்களிள் எழுதும் கூலிப் படைகள் இறைவனை பயந்து கொள்ளவேண்டும் என ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மட் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு கூலி எழுத்தாளர்களினால் செய்யப்படும் போலி பிரச்சாரங்களுக்கு எதிராக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

இவ் உலகில் தனிப்பட்ட காரணங்களுக்காகவும்,தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளவும்,சுக போக வாழ்க்கையை அனுபவிப்பதற்காகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீனை  பற்றி பல்வேறு வழிகளில் உண்மைக்கு புறம்பான பல காரணங்களை உருவாக்கி அவற்றின் மூலம் இழிவு படுத்த நினைக்கலாம் ஆனால் மறுமை நாள் இருக்கிறது நாம் செய்த அனைத்து செயற்பாடுகளுக்கும் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும் என இந்த கூலிப்படைகள் நினைக்க மறந்துவிடக் கூடாது.

அமைச்சர் றிஷாட்டின் தலைமைத்து வழிநாடத்தல்களையும்,சமூக சிந்தனைகளையும் கண்டு அஞ்சிய அரசியல்வாதிகள் அவரை அரசியலில் இருந்து இல்லா தொழிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கூலிப் படை எழுத்தாளர்களை பயன்படுத்தி பல்வேறு வகையில் அவருக்கு எதிராக பல வதந்திகளை மறைமுகமாக பரப்பி வங்குரோத்து அரசியலை செய்கின்றனர்.இதனை மக்கள் அறியாவிட்டாலும் படைத்த இறைவன் அறிந்துள்ளான் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மைக்காலத்தில் இவர்களால் பரப்பி விடப்பட்டிருக்கும் பொய்யான ஓர் செய்தியே புலமை பரிசில் சம்பந்தமானதாகும்.இதன் உண்மைத்  தன்மையை மறைத்து அமைச்சரை கலங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இரவு பகலாக பொய்யான,கற்பனை வடிவிலான செய்திகளை ஊடகங்களில் பிரசுரிக்கின்றனர்.இவ்வாறான செய்திகளை பரப்பி அமைச்சர் றிஷாட்டை இழிவு படுத்தும் இந்த கூலிப் படைக்களுக்கு விரைவில் காலம் பதில் சொல்லும்.கற்பனை எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் இறைவனிடத்திலும் பதில் செல்லியே ஆக வேண்டும் என்பதை கூலிக்கு எழுதும் கூட்டம் நினைவில் கொள்ளவேண்டும்.

புலமை பரிசு விடயமானது அ.இ.ம. கட்சியினதும் அதன் தலைமையினதும் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். கடந்த ஐந்தாண்டு காலமாக எமது சமூகத்தில் இருக்கும் வறிய மாணவர்களை இணங்கண்டு அவர்களின் எதிர்கால வாழ்வை சுபீட்சமாக்கவும் முஸ்லீம் சமூகத்தின் வைத்திய துறையை மேன்படுத்தும் நோக்குடனுமே இந்த புலமை பரிசில் திட்டம் வழங்கபட்டு வருகின்றது.

இந்த விடயத்தில் அமைச்சருக்கு எந்த வித தனிப்பட்ட தேவைகளும் இருந்ததில்லை. சமூகத்துக்காக தன்னை அர்பணித்து எதிர்கால சந்ததியினரின் கல்வி துறையை மேம்படுத்த வேண்டும் என்பதே அமைச்சரின் முற்று முழுதான நோக்கமாகும்.பாகிஸ்தான் அரசினால் வழங்கப்பட்ட புலமை பரிசினை தனது மகளுக்கு வழங்கியதாகவும் மீதி புலைமை பரிசுகளை அமைச்சருடன் நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாகவும் ஒரு சில கூலிப் படைகள் பல்வேறு இழிவான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி விட்டிருக்கிறார்கள்.

புலமைப் பரிசில் சம்பந்தமான உண்மைத் தன்மையை தெளிவாக நாம் விளங்கி கொள்ளவேண்டும். அமைச்சர் றிஷாட் பதீயுதின்  ஒவ்வொரு நொடியும் இறைவனை பயந்து வாழும் ஒரு ஆளுமை மிக்க அரசியல் தலைமை.அவ்வாறான ஒரு சிறந்த தலைவனால் இவ்வாறான செயற்பாடுகளில் நிச்சயம் ஈடுபட்டிருக்க முடியாது.அமைச்சர் றிஷாட் பதியுதீன் சுயநல அரசியலை எப்போதும் விரும்புவதும் இல்லை.எனவே இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தை விற்று அரசியல் நடத்தும் தலைமைகளுக்குள் பொது நலத்துடன் செயற்படும் அரசியல் தலைமை என்றால் அது அமைச்சர் றிஷாட் பதியுதீனாகதான் இருக்க முடியும்.

எழுத்தாளர்கள் சில அரசியல்வாதிகளின் சுய நலப் போக்குகளுக்கு சோரம் போகாமல் சமூக சிந்தனையுடன் இனிவரும் காலங்களில் எழுத வேண்டும்.என ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *