தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

86.5 கோடி பதிவுகனை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்

சமூக வலைத்தளமான (பேஸ் புக்) முக நூல் நிறுவனம் 86.5 கோடி பதிவுகனை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வெறுப்பு, வன்முறையைத் தூண்டுதல் உட்பட சமூக கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை தடுக்க முக நூல் நிறுவனம் தவறிவிட்டதாக அண்மையில் புகார் எழுந்தது.

இந்நிலையில் முக நூல் நிறுவனம் வெளியிட்டுள்ள 86 பக்க அறிக்கையில் இந்தாண்டு முதல் காலாண்டில் 86 கோடியே 50 இலட்சம் வெறுப்பு,  வன்முறையைத் தூண்டும் வகையிலான மற்றும் ஆபாசமான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முந்தைய நாட்களில் முக நூல் நிறுவனத்தை சார்ந்து செயல்படும் 200 செயலிகளுக்கு அந்நிறுவனம் தற்காலிகமாக தடைவிதித்தது. முக நூல் பயனர்களின் தகவல்களை திருடி தேர்தலில் சாதகமாக பயன்படுத்தி கொண்டதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதையடுத்து பயனர்களின் தகவல்களை பாதுகாக்க முக நூல் நிறுவனம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தகவல்களை திருடி தவறாக பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மை பர்சனாலிட்டி செயலி உள்ளிட்ட 200 செயலிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் உண்மை என கண்டறியப்பட்டால் செயலிகள் நிரந்தரமாக தடை செய்யப்படும் என்று முக நூல் நிறுவனம் எச்சரித்துள்ளது.

Related posts

கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளது.

wpengine

யாழ்-அருட்தந்தையர்கள் மூவர் முதல் கட்டமாகத் தனிமை! மன்னார் ஆயர் இல்லம் முடக்கம்

wpengine

மக்களின் நலன் கொண்டதாகவே அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine