பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

778 வர்த்தகர்களுக்கு எதிராக வன்னியில் வழக்குத் தாக்கல்

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 778 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த வழக்குகள், குறிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை,காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைகளை காட்சிப்படுத்தாமல் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்தமை என்பவற்றின் காரணமாகவும்,

இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆகக் கூடிய விலை என்பன குறிப்பிடாது பொருட்களை விற்பனை செய்தமை, பொரு ட்களில் உள்ள விலையை அழித்து அதிகரித்த விலை சுட்டுத்துண்டு ஒட்டியமை, பொருட்களை விற்பனை செய்யும் போது மிகு திப்பணத்திற்கு பதிலாக மாற்றுப்பண்டம் வழங்கியமை, வியாபார நிலையத்தில் நடப்பு ஆண்டிற்கான முத்திரை இடப்படாத தராசு வைத்திருந்தமை என்பவற்றினாலுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 634 வர்த்தகர்களுக்கு எதிராகவும், செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் வவுனியா, முல்லைத்தீவு பகுதியைச் சோந்த 144 வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவு சரியாக வழங்கப்படும்.

wpengine

முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத தாக்குதல்

wpengine

ஐ.தே.க. யார் ஜனாதிபதி வேட்பாளர்

wpengine