பிரதான செய்திகள்

77 முஸ்லிம் குடும்பங்கள் காணி உரிமை கோரி முல்லைத்தீவில் போராட்டம்! அமைச்சர் றிஷாட் சந்திப்பு

தமக்கான காணி அனுமதிப்பத்திரத்தினை வழங்கக்கோரி முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

77 முஸ்லிம் குடும்பங்கள் காணி உரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை மக்கள் பிரதிநிதிகள் இன்று நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

 

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளிடம் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

1982 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முறிப்பு கொத்தியாகும்பம் கிராம காணிகளுக்கு இன்று வரை அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை.

மேலும் கரைத்துரைப்பற்று, பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ் நாகன், சோலைத்தீவு காடு, கிராம விசாலிப்பு ஆகிய கிராம மக்களுக்கு 1977 ஆம் ஆண்டு காணிகள் வழங்கப்பட்டன.

 

இந்நிலையில் அந்தக் காணிகளுடன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள நல்லுமுறிப்பு மற்றும் அம்பலன்பற்று காணிகள் என்பன இன்று வரை உரிய குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த விடயங்கள் தொடர்பில் நாளை ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

 

அதன் பின்னர் கேப்பாப்புலவில் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களையும் குறித்த மக்கள் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

இதன்போது தொடர்ந்து நல்ல முடிவுகள் கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் 4 புதிய அமைச்சரை நியமித்த கோத்தா

wpengine

சுற்றுலாப் பயணிகளின் செல்பி மோகத்தினால் பரிதாபமாக உயிரிழந்த டொல்பின் குட்டி

wpengine

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! உபகரணங்கள் வழங்கவில்லை

wpengine