செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

77 ஆவது சுதந்திரதின நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது!!!

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வானது இன்று(4) மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மிக சிறப்பான முறையில் இடம்பெற்றது.

அந்தவகையில் சுதந்திரதின நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக அனைத்து சமயம் சார்ந்த வழிபாடுகள் காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது அதனை தொடர்ந்து 8.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது மேலும் அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்களால் சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

தொடர்ந்து காலை 8.09 மணிக்கு நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த தேசாபிமானிகளுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து மேன்மை தங்கிய அதி மேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க அவர்களின் 77 ஆவது சுதந்திரதின சிறப்புரையினை காணொளியாக அனைத்து உத்தியோகத்தர்களும் மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் பார்வையிட்டனர்.

மேலும் கடந்த வருடம் சிறப்பாக சேவையாற்றிய மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபரினால் மெச்சுரை வழங்கிவைக்கப்பட்டது தொடர்ந்து இல்லவிளையாட்டிப்போட்டிக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. இறுதியாக மாவட்ட செயலக வளாகத்தில் மரக்கன்றுகள் நாடிவிக்கப்பட்டன.

Related posts

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் அளவுக்கு மூளை கோளாறு இல்லை-அமைச்சர் ரோஹித்த

wpengine

அரச ஊழியர்களுக்கு 23ஆம் திகதி சம்பளம் வழங்க வேண்டும்

wpengine

19ஐ விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்-ராஜபக்‌ஷ

wpengine