பிரதான செய்திகள்

77வது தேசிய சுதந்திர தின விழாவில் தமிழ் மொழி மூலமும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

சுதந்திர சதுக்கத்திற்கு மூன்று காவல்துறை மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்புடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

இலங்கையின் (Srilanka) 77வது தேசிய சுதந்திர தின பிரதான வைபவம் இன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர பாதுகாப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் அல்லது பிற துணை வாகனங்கள் எதுவும் இல்லை வருகை தந்திருந்தார்.

அத்துடன் பிரதமர் மற்றும் விருந்தினர்களும் வந்தபோது, ​​ஒரே ஒரு காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள் மட்டுமே முன்னால் வந்ததை அவதானிக்க முடிந்தது.

எனினும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் பலரும் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழியில் தேசிய கீதம்

இதேவேளை, தேசியக் கொடி ஏற்றப்படும் போது, சிங்கள மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நிலையில், அணிவகுப்புக்கள் அனைத்தும் முடிவுற்ற பின்னர் தமிழ் மொழி மூலமும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கும் முறை நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் ஆட்சியில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தந்திர திருத்தத்தின் தந்திரோபாயங்கள்!!!

wpengine

வவுனியாவில் உயர்தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய மைத்திரியின் மாநாடு

wpengine

புகைப்படமொன்றை வைத்துக்கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள் அமைச்சர் றிஷாட்

wpengine