பிரதான செய்திகள்

75 மெற்றிக்தொன் பேரீத்தம் பழங்கள் சவூதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு இம்முறை (2021) இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 75 மெற்றிக்தொன் பேரீத்தம் பழங்கள் சவூதி அரேபிய அரசாங்கத்தால்  வழங்கப்பட்டுள்ளது. 


இந்த பேரீத்தம் பழங்களைக் கையளிக்கும் நிகழ்வு பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்  (16)  இடம்பெற்றது.


இதன்போது இலங்கையில் உள்ள  சவூதி அரேபிய தூதரக பிரதித் தூதுவர் றியாப் அல் ஷரீப், பிரதமரும் புத்தசாசனம், கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த பேரீத்தம் பழங்களைக் கையளித்தார். 


அவற்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரபிடம்   கையளித்தார். 


இப் பேரீத்தம் பழங்கள் மிக விரைவில் நாடு பூராகவும் உள்ள பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட 
திணைக்களத்தினால்
ஏற்பாடுகள்  நடைபெற்றுக்கொண்டிருப்பதாக திணைக்களப் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.

Related posts

12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் விலை 5175 ரூபா

wpengine

ஜனாதிபதியின் பிரகடனம் வாபஸ் பெறப்பட்டால் வனப்பகுதிகள் அழியும்! ஒரு போதும் இடமளியோம்- சாகர தேரர்

wpengine

ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு

wpengine