சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட செந்நெல் கிராமப் பகுதியில், விசர்நாய் ஒன்று 7 பேரைக் கடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (12) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தை அடுத்து, உடனடியாக செயல்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவினர், வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை விசாரித்ததோடு, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் சென்று அப்பகுதி இளைஞர்களால் கொல்லப்பட்ட அந்த நாயின் தலையை மீட்டு, வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இன்று (13) அப்பகுதியில் உள்ள விசர்நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் விசர்நாய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் 3 வயது தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்கள் இவ்வாறு விசர் நாய் கடிக்குள்ளாகியுள்ளதுடன் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத், பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஏ. சி. எம். பஸால் , மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர் ஆகியோரின் ஆலோசனையில் உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg