65,000 வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலகங்களில் கருத்துப் பெட்டி

வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பான மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கான முயற்சிகளில் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு ஈடுபட்டுள்ளது.

அதற்கமைய மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கான கருத்துப் பெட்டிகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக இக்கருத்துப் பெட்டி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வீட்டுத் திட்டம் தொடர்பில் பல தரப்புகளிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தமையை தொடர்ந்தே ஜனாதிபதி இவ்வாலோசனையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares