பிரதான செய்திகள்

65 ஆயிரம் பொருத்து வீடுகளில் எந்த குறைப்பாடுகளும் இல்லை – சுவாமிநாதன்

வடக்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பொருத்து வீடுகளில் எந்த குறைப்பாடுகளும் இல்லை என்று
அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை வந்துள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது, இது தொடர்பில்
அவருக்கும் தெளிவுப்படுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில்
அமைக்கப்பட்டுள்ள பொருத்து வீடுகளை சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு
நேற்று காண்பித்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு  இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

நாங்கள் சுவீடன் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கும் போது தாம் கூறியதற்கு இனங்க
பொருத்து வீடுகளை வந்து அவர் பார்வையிட்டார். இங்கு வருகை தந்தவர்களும் இந்த வீட்டை
பார்த்து புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளலாம் அப்பொழுது உங்களுக்கு இந்த வீடுகள் எவ்வாறு அமைய பெற்றுள்ளன என உங்களுக்கு விளங்கும்.

சிலர் கூறுகிறார்கள் இந்த வீடுகள் தற்போதே உடைந்துள்ளதாக ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Related posts

மின்சார சபையின் நிதி குற்றச்சாட்டு தொடர்பில் உயர் அதிகாரி ஒருவருக்கு விசாரணை!

Editor

ரணிலின் அதிரடி தீர்மானம்! பதவி விலகல்

wpengine

முல்லைத்தீவில் சிலர் யதார்த்தங்களை மறந்து முஸ்லிம்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பி வரும்போது விரட்டுகின்றீர்களே! றிஷாட் ஆவேசம்

wpengine