Breaking
Sun. Dec 10th, 2023
வடக்கில் அமைக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடமைப்புத் திட்டம் பொதுமக்கள் வாழ்வதற்கானதா? அல்லது ஒருசிலரின் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்கானதா என்று சிங்கள ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.

வடக்கில் வாழும் வசதி குறைந்த மக்களுக்கு சர்வதேச உதவியுடன் சுமார் 65 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிர்மாணப் பணிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான இந்தியக் கோடீஸ்வரர் லஷ்மி மிட்டலின் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் வீடுகள் அனைத்தும் இரும்பு மற்றும் ஒருவகை பிளாஸ்டிக் கலவைகளினால் உருவாக்கப்படவுள்ளன.

ஏதேனும் ஒரு கட்டத்தில் குறித்த ஜேடியு எனப்படும் பிளாஸ்டிக் கலவை தீப்பற்றிக் கொள்ளும் பட்சத்தில் அதில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை உயிராபத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாகும்.

மேலும் குறித்த வீடொன்றை நிர்மாணிக்க 21 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளது. பொதுமக்கள் வாழ்வதற்கு எவ்வகையிலும் பயனற்ற, சூழலுக்குப் பொருத்தமற்ற குறித்த வீடமைப்புத் திட்டத்தின் வீடொன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் மூன்று சாதாரண வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகின்றது.

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும் இதனைச் சுட்டிக்காட்டி, வீடமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் இந்தியக் கோடீஸ்வரர் லஷ்மி மிட்டல் மற்றும் ஒருசிலரின் வயிற்றை வளர்த்துக் கொள்வதற்காக அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டமே தவிர பொதுமக்கள் வாழ்வதற்கான நோக்கில் அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டமாக இருக்க முடியாது என்றும் குறித்த சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *