65 ஆயிரம் பொருத்து வீடுகள் தொடர்பில் குற்றச்சாட்டு!

வடக்கில் மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் தொடர்பில் உள்ளூர் மட்டத்தில் பாரிய எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த பொருத்து வீடுகள், ஸ்திரமற்ற கூரை அமைப்புக்கள், காற்று வெளியில்லாமை, மற்றும் சுகாதார வசதியின்றி அமைக்கப்படவுள்ளதாக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பொருத்து வீட்டு திட்டம் தொடர்பில் தொழில்நுட்ப அறிக்கைகளை வைத்தே இந்த குற்றத்தை அவர்கள் சுமத்தியுள்ளனர்.

லக்சம்பேர்க்கின் ஆஸர் மிட்டால் நிறுவனத்தின் இந்த பொருத்து வீடுகள் குறைந்த ஆயுளைக் கொண்டவை.

அத்துடன் உள்ளுர் நிர்மாணங்களை காட்டிலும் இரண்டு மடங்கு செலவீனத்தைக் கொண்டவை என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வீடுகளின் ஜன்னல்கள் சிறியவை. எனவே அதன் மூலம் உரிய காற்று வீடுகளுக்கு கிடைக்காது என்பதே மொரட்டுவை பல்கலைக்கழக நிபுணர்களின் தீர்மானமாக உள்ளது என்று இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares