பிரதான செய்திகள்

65ஆயிரம் விட்டு திட்டம்! கல் வீடு அமைக்கும் சாத்தியம்

பொருத்து வீட்டுக்குப் பதிலாக கல் வீடு அமைப்பதற்குச் சாத்தியம்ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்நடைபெற்ற கலந்துரையாடலில், பொருத்து வீடு பொருத்தமில்லாதது என்ற கருத்துஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காஆகியோரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக்கு விரைவில் வீட்டுத் திட்டம் எவ்வாறு அமையப் பெறவேண்டும் என்றயோசனையை முன்வைப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கில் தலா 21 லட்சம் ரூபா செலவில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளைநிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்குத் தமிழ் அரசியல் தரப்பினர்மற்றும் வடக்கு மாகாண சபையினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

மேற்படிதிட்டம் ஜனாதிபதியினால் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்தநிலையில், ஜனாதிபதி செயலகத்தில், பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பானகலந்துரையாடல் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர்டி.எம்.சுவாமிநாதன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் முன்னாள் ஜனாதிபதிசந்திரிகாஆகியோர், பொருத்து வீட்டுத் திட்டம் பொருத்தமில்லாதது என்றுகுறிப்பிட்டுள்ளனர்.

11 லட்சத்துக்கே அந்த மக்கள் விரும்பும் வீடுஅமைக்கக்கூடியதாக இருக்கும்போது, ஏன் அதிக பணத்தை அந்த மக்கள் விரும்பாத வீடுஅமைக்க செலவிட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், கல் வீடு அமைக்கப்படுமாயின் அதற்கானமூலப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கும் என்றுகுறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தத் திட்டம் நீண்ட காலமாக இழுபறி நிலையில்இருக்கின்றது. ஒரு வருடம் முடிகின்றது. இன்னமும் எந்தவொரு நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படவில்லை என்றுசர்வதேச அழுத்தம் அதிகரிக்கும்.

எனவே, இந்தப் பிரச்சினையை விரைந்து தீர்க்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால கலந்துரையாடலின் இறுதியில், இந்த வீட்டுத் திட்டம்எப்படி அமைய வேண்டும் என்ற யோசனையை விரைவில் அமைச்சரவைக்குச் சமர்பிப்பதாகத்தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் கல் வீடு அமைவதற்கான சாத்தியம் இருப்பதாகத்தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மானிய விலையில் பொது மக்களுக்கு பொதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை

wpengine

காஷ்மீரில் மக்கள் உயிரிழந்தது கவலை! அவர்களும் நம் மக்களே! மோடி

wpengine

சமூர்த்தி பயன்பாட்டாளர்களுக்கு இலவச மின்சாரம்-எஸ்.பி. திசாநாயக்க

wpengine