பிரதான செய்திகள்

60 கோடி பெறுமதியான 2 பென்ஸ் கார்களை இறக்குமதி செய்யும் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பயன்பாட்டிற்காக சுமார் 60 கோடி பெறுமதியான மெர்சீடிஸ் பென்ஸ் S600 (Customized Limited Edition) கார்கள் இரண்டு இலங்கை்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது இலங்கை துறைமுகத்திலுள்ள இந்த இரண்டு கார்களுக்கு நிவாரணம் ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி செயலாளரினால், சுங்க பிரிவிடம் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. (Chassis No WDD2229762A295414 மற்றும் WDD2229762A295805)

இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ள வாகனத்தின் பாதுகாப்பிற்கு விசேட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பொதுவான மோட்டார் வாகனங்களுக்கு விடவும் இதற்கு அதிக பணம் செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்ட குண்டு துழைக்காத 3 பென்ஸ் கார்கள் மற்றும் மேலும் பல குண்டு துழைக்காத வாகனங்களை பெற்றுள்ள ஜனாதிபதிக்கு கடந்த வருடத்தில் அதிக விலையுடனான கார் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை ஜனாதிபதியின் மகன் பயன்படுத்துவதாக உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வாகனம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் பயன்படுத்தப்பட்ட பிரபல கெடிலெக் பீஸ்ட் ரக வாகனத்தின் பெறுமதியாக கூறப்படும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

Related posts

அகில இலங்கை மக்கள் கட்சியின் பேராளர் நாட்டில் இந்தியா அரசியல்வாதிகள்

wpengine

அரசியல் மாற்றத்துக்காக சர்வதேச உதவிகளை நாடும் ஜே.வி.பி

wpengine

மத்திய மாகாண பட்டதாரிகளே! இது உங்களின் கவனத்திற்கு

wpengine