பிரதான செய்திகள்

6 மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னால் அமைச்சர் றிஷாட்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறும், கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு இன்று (14) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, தனது வீட்டில் பணியாற்றிவந்த சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றிலும் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன்போது, அவ்வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு

wpengine

கிழக்கு தேர்தலில் தூய்மையான முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி

wpengine

நெல்,மரக்கறி இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

wpengine