வன்னியில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 19 அரசியல் கட்சிகள், 34 சுயேட்சை குழுக்களை சேர்ந்த 477 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதுடன், 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் 19ஆம் தேதி வரை ஏற்றுகொள்ளப்பட்டிருந்தது.
அதற்கமைய வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 19 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயேட்சை குழுக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.
அந்தவகையில் இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, இலங்கை சோசலி கட்சி, ஜனநாயக இடதுசாரி முண்ணனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், பொதுமக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஜனசெத பெரமுன, சிங்கள தீபஜாதிக பெரமுன, தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனி, தேசிய மக்கள் சக்தி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி, மௌவிம ஜனதா கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, எக்சத் பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழர் விடுதலை கூட்டணி, முன்னிலை சோசலிச கட்சி, எங்கள் மக்கள் சக்தி கட்சி ஆகிய அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சை குழுக்களும் தமது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளன.
இதேவேளை 10 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.