பிரதான செய்திகள்

6 அமைச்சர்கள் பதவி விலகிக்கொள்ள வேண்டும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் கௌரவமான முறையில் தங்களது அமைச்சு பதவிகளில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஒருவர் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிப்பதாயின் அவர் அரசாங்கத்துக்கு எதிரானவராக இருக்க முடியாது.

இந்நிலையில், பிரதமருக்கு எதிராக வாக்களித்த அமைச்சர்கள் கௌரவமான முறையில் தங்களது அமைச்சு பதவிகளில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது சார்பாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப் பதவியை வகிப்பது பண்பாடான ஒன்றல்ல” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியினால் பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் 6 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா பாரதி முன் மாதிரித்தோட்டம் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

wpengine

கணவனின் சந்தேகம் இளம் பெண் தற்கொலை முயற்சி

wpengine

ரணிலிடம் 5கோடி பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்

wpengine