பிரதான செய்திகள்

57 சபை அமர்வி்ல் ஒரு தடவை மட்டும் கலந்துகொண்ட மு.கா. முஹம்மது றயீஸ்

(அப்துல்லாஹ்)

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் முஹம்மது றயீஸ் அக்கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண சபை அமர்வுகளில் அவர் கலந்து கொள்ளாமல் விடுமுறை எடுப்பதாகவும், வன்னி மக்களின் வாழ்வாதாரப்பிரச்சினை தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாவா பாறுக் கட்சியின் தலைமைக்கு செய்த முறைப்பாட்டிற்கு அமைய இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மாகாண சபை உறுப்பினர் நடைபெற்று முடிந்த 57 மாகாண சபை அமர்வுகளில் கன்னி உரையை தவிர வேறு எந்த பிரேரணையையோ அல்லது விவாதங்களிலோ பங்கு பற்றவில்லை.

மாறாக அரசியலை மூலதனமாக்கி தனது வியாபார நோக்கினையே மேற்கொண்டுள்ளதாகவும் மக்களின் நலனில் அக்கறை காட்ட அவரால் முடியவில்லை என கூறப்படுகின்றது.

இந்த குற்றச்சாட்டுக்களை களையும் முகமாக குறித்த உறுப்பினர் வன்னி முஸ்லீம் காங்கிரஸ் முக்கிய உறுப்பினர்களுடன் கட்சித் தலைவரை சந்தித்துள்ளார் என அறிய முடிகின்றது.

அண்மைக்காலமாக வன்னிப்பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாவா பாறுக்கிற்கும் மாகாண சபை உறுப்பினர் றயீஸுக்கும் கருத்து வேறுபாடுகள் இடம்பெற்றுள்ளன.

கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை வன்னிக்கு கட்சி வழங்க முன்வந்துள்ள போதிலும் இருவரிற்கும் இடையில் உள்ள பிரச்சினை காரணமாக அட்டாளைச்சேனைக்கு வழங்க கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் வன்னியில் தற்போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் அமைச்சர் றிசாட் பதியூதினின் முக்கிய ஆதரவாளர்களுடன் உரையாடலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருந்த போதிலும் மாகாண சபை உறுப்பினர் தொடர்பில் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தனிப்பட்ட நல்ல அபிப்பிராயம் ஒன்றினை கொண்டிருப்பதாகவும் குறித்த மாகாண சபை உறுப்பினரை இடை நிறுத்த முடியாது எனவும் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

Related posts

இரண்டு பட்டனை கழட்டிவிட்ட நடிகை! கவர்ச்சி படம் வெளியானது.

wpengine

அனைத்து கட்சித் தலைவர்களுக்கு விசேட அறிவிப்பு!

Editor

ஊழல் மோசடி இரண்டு அமைச்சர்கள் அச்சத்தில்

wpengine