பிரதான செய்திகள்

5000 ரூபா பணம் வழங்க சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்கச் சென்ற சமூர்த்தி அதிகாரியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நாஉல பகுதியில் இடம்பெற்றுள்ளது.


நேற்றைய தினம் பிற்பகல் 5 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக குறித்த அதிகாரி நேற்றைய தினம் மேற்படி பகுதிக்கு சென்றுள்ளார்.


இதன்போது சமூர்த்தி வங்கியில் ஏற்கனவே கடன் பெற்று அதை மீள செலுத்தாமல் உள்ள பெண்ணொருவர் தனக்கும் குறித்த கொடுப்பனவை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், சமூரத்தி அதிகாரி பணம் வழங்க மறுத்துள்ளார்.


எவ்வாறாயினும், குறித்த சந்தர்ப்பத்தில் தனக்கு சில தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறித்த அதிகாரி காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளர்.


இதுவரையான காலப்பகுதியில் சுமார் 15 இலட்ச குடும்பங்களுக்கு இந்த நிவாரண சலுகைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யக்கோரி அமைச்சர் றிஷாட் கோரிக்கை

wpengine

நீர்க்கட்டணமும் அதிகரிக்கிறது!

Editor

கிண்ணியாவில் தொடரும் முஸ்லிம் எய்ட் நிறுவன வாழ்வாதார உதவி.

wpengine