பிரதான செய்திகள்

5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் திங்கட்கிழமை அதனை பெற்றுக்கொள்ள முடியும்

நாட்டில் இதுவரை 22,66,301 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதற்கமைய, இதுவரை 11,332.5 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், 5000 ரூபா கொடுப்பனவு இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அதனை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோராக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள், விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள், சிறுநீரக நோய் நிலைமைக்கான கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள், நூற்றாண்டு பூர்த்திக்கான முதியோர் கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்டோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறினார்.

Related posts

கொளுத்தும் வெயிலுக்கு 24 பேர் பலி: ஆந்திராவில் சோகம்

wpengine

100 வயதினை தாண்டியோருக்கு 5000ரூபா

wpengine

வட மாகாண சபையின் புதிய உறுப்பினர் இ.ஜெயசேகரம்

wpengine