விரைவில் வழங்கப்பட வேண்டிய கடன் தவணையை மீளச் செலுத்துவதற்கு முன்னர், மக்களை வாழ வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முல்லைத்தீவில் இன்று (10) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது பெருமளவான மக்கள் கலந்து கொண்டதுடன் பலர் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து எதிர்கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை விரைவில் செலுத்த வேண்டும். எதையும் செய்வதற்கு முன்னும் மக்கள் வாழ வேண்டும் என்பதை நான் அரசாங்கத்திற்கு கூற விரும்புகிறேன். மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் வழங்குவது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
எரிபொருளை இழந்தால் நாட்டின் தொழில் அமைப்பும் சமூக அமைப்பும் சீரழியும். இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் திட்டம் உள்ளதா? நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள்,டொலர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு திறன் இல்லை,
இனங்கள், மதங்களுக்கும் இடையில் வெறுப்புணர்வை பரப்பி அசாதாரண சூழ்நிலையை உருவாக்குவதுதான் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயலாகும்.
அரசாங்கம் அவ்வாறு செயற்படும் வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி மருத்துவமனைகளுக்கு மூச்சுக்கைக் கொண்டு வந்து நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மறுபுறம், தகவல் தொழில்நுட்ப புரட்சி திட்டம் திட்டத்தை பாடசாலை கட்டமைப்புக்கு கொண்டு வந்து நவீன கல்வி, கணினி கல்வியறிவு, தகவல் தொடர்பு கல்வியறிவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.
அரசாங்கம் இனவாதத்தால் மக்களை ஆயுதபாணியாக்கும் அதேவேளையில், நல்ல சுகாதாரத் திட்டங்களையும், நல்ல கல்வித் திட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தியாக நாங்கள் மக்களுக்கு வழங்குகிறோம். இதுதான் அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் உள்ள வித்தியாசம்.”