பிரதான செய்திகள்

500 பாலங்களை நிர்மாணிக்க உள்ளுராட்சி அமைச்சு ஒப்பந்தம்

(அஷ்ரப்  ஏ சமத்)
கிராமங்களில் உள்ள 500 பாலங்களை நிர்மாணிக்க வென ஜக்கிய இராச்சியமும், நெதா்லாந்து  ஆகிய நாடுகளின் கம்பணிகளுடன் மாகாணசபைகள் உள்ளுராட்சி விளையாட்டுத் துறை அமைச்ச்சு  இரண்டு ஒப்பந்தங்களை நேற்று முன்தினம்(18) கொழும்பில் வைத்து கைச்சாத்திட்டது.

இத்திட்டதிற்காக இங்கிலாந்து கம்பணி  250 பாலங்களை நிர்மாணிக்கவென 50 மில்லியன் ஸ்ரேலிங் பவுன், நெதா்லாந்தின் கம்பனி ஒன்று  50 மில்லியன் ஈயுரோக்களை வழங்குகின்றது. அமைச்சா் பைசா் முஸ்தபாவின் நடவடிக்கையின் பேரில் இந்த அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு கிடைக்கின்றது. இதனால் கிராமங்களில் அடிப்படை வசதியற்று கிராமங்களில் பலகை, தொங்கு பாலம்  உடைந்துள்ள பாலங்கள் மற்றும் கிராமத்துக்கு கிராமம் செல்ல முடியாத  பாலங்களை அடையாலப்படுத்தப்பட்டு  புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்படும்.

 
அத்துடன் இவ் வைபவத்தின்போது  புதிதாக தெரிபு செய்யப்பட்ட 8500 உள்ளுராட்சி உறுப்பிணா்களுக்காக ஜக்கிய அமேரிக்க நாட்டின் உதவியின் கிழ் உள்ளுராட்சி சட்ட திட்டங்கள் நிதி, மற்றும் கடமை பொறுப்புக்கள் பற்றிய  கை நுால் ஒன்றும் வெளியீட்டு வைக்க்பபட்டது.  இந் நுாலின் முதற்பிரதிகள் அமைச்சின் பணிப்பாளா், நெதர்லாந்து பிரதித் துாதுவாிடம் கையளிக்கப்பட்டது. இவ் வைபவத்தில் அமைச்சின் செயலாளா் கமல் பத்மசிறி  மற்றும் ஜக்கிய இராச்சியம், நெதா்லாந்து கம்பணிகளின் பணிபபாளா்களும் கலந்து கொண்டனா் 

Related posts

14ஆம் திகதி தொழில் சங்க நடவடிக்கை! வடமாகாண உத்தியோகத்தர்கள் ஆதரவு

wpengine

சுதந்திர கட்சியின் தலைமை பதவியை கைவிடத் தயார்

wpengine

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால், தற்போது நாடாளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாது.

wpengine