பிரதான செய்திகள்

5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி சதொச நிலையத்தில்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி ஒன்றை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்டவை அடங்கிய இந்த பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த 5 வகை பொருட்களுகளை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியாக நுகர்வோரினால் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப் பொதி இன்று தொடக்கம் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது.

5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் ஐலண்ட் பால்மா, 1 கிலோ சிவப்பு சீனி, 100 கிராம் தேயிலை ஆகியன இதில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

காஷ்மீர் விவகாரத்தில் மோடி அரசு மௌனம்- ராகுல்

wpengine

மன்னார்,முள்ளிக்குளம் காணிகள் வழங்குவதில் இழுத்தடிப்பு! அமைச்சர் றிஷாட்டிடம் மக்கள் முறைப்பாடு

wpengine

மக்களின் எதிர்ப்பையும் போராட்டங்களையும் இந்தச் சட்டத்தின் மூலம் அடக்க முடியாது-எம்.ஏ.சுமந்திரன்

wpengine