5 நிமிடங்களில் டெல்லியை தாக்க முடியும்- பாகிஸ்தான் அணுசக்தியின் தந்தை

ஐந்து நிமிடங்களில் இந்தியத் தலைநகர் டெல்லியை தாக்க முடியுமென சர்ச்சையான கருத்தொன்றை பாகிஸ்தான் விஞ்ஞானி ஏ.கியு. கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற விழாவொன்றிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் அணுசக்தியின் தந்தை என்றழைக்கப்படும் ஏ.கியு. கான்  இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளமை  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராவல் பிண்டி அருகிலுள்ள கதுவா தளத்திலிருந்து ஏவுகணை மூலம் 5 நிமிடங்களில் இந்தியத் தலைநகர் டெல்லியை தாக்க முடியுமென இவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்திற்கெதிராக  இந்தியா தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய முன்னாள் இராணுவ தளபதி என்.சி.விஜ்  கூறுகையில், இந்தியாவிற்கு  ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் தாக்கும் திறன் உள்ளது ஆனால் இந்திய தரப்பினர் இதனை பற்றி பேசுவதில்லை என தெரிவித்துள்ளதோடு இந்த கருத்து அர்த்தமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares