வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் நாடு முழுவதிலும் ஒவ்வொரு பிரதேச செயலாளா் பிரிவிலும் 200 எழுச்சிக் கிராமங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அம்பாறை நவம்கம்புரவில் 25 வீடுகளைக் கொண்ட 5வது உதா கம்மான தயா கம்மான எனப் பெயரிட்டு இன்று (7)ஆம் திகதி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சா் தயாகமகே பிரதியமைச்சா் அ னோமகமகே வும் கலந்து கொண்டனா்.


அத்துடன் இன்று திறக்க்பட்ட வீடமைப்புக் கிரமாம் 5வது கிராமமாகும் அடுத்த கிழமை மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் எழுச்சிக்கிராமங்கள் திறக்கப்பட உள்ளன. ஏற்கனவே முதலாவது கிராமம் முல்லைத்தீவிலும் 2, ஆம் 3 ஆம கிரமாம் ஹம்பாந்தோட்டை, 4 வது கிராமம் கண்டியிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அம்பாறை மவாட்டத்தில் 33 ஆயிரம் குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் வாழ்கின்றதாக அரச அதிபரின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றன. அதில் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 23ஆயிரம் வீடுகளையாவது எனது அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்படும். அத்துடன் 300 வீடுகள் நிர்மாணிக்கப்படும். அம் மக்களது காணிகளை கடந்த அரசு கொள்லையடித்துள்ளது.